< Back
உலக செய்திகள்
உலக செய்திகள்
ராட்சத ராட்டினத்தில் தீ விபத்து; 20-க்கும் மேற்பட்டோர் படுகாயம்
|18 Aug 2024 9:34 PM IST
ஜெர்மனியில் ராட்சத ராட்டினத்தில் தீ விபத்து ஏற்பட்ட சம்பவத்தில் 20-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
பெர்லின்,
ஜெர்மனியின் லேப்சிக் பகுதியில் உள்ள ஸ்டார்ம்தாலர் ஏரியின் அருகே நேற்று இரவு பிரம்மாண்ட இசைத்திருவிழா நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர். இந்த இசைத்திருவிழாவில் ராட்டினங்கள் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டு மற்றும் பொழுதுபோக்கு அம்சங்கள் இடம்பெற்றிருந்தன.
இந்த நிலையில், அங்கிருந்த ராட்சத ராட்டினத்தில் திடீரென தீப்பற்றி எரியத் தொடங்கியது. இதனால் மக்கள் அலறியடித்துக் கொண்டு ஓடினர். இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை. அதே சமயம், இந்த சம்பவத்தில் 23 பேர் படுகாயமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்துக்கான காரணம் குறித்து அந்நாட்டு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.