< Back
உலக செய்திகள்
உலக செய்திகள்
ஆர்மேனியா ராணுவ என்ஜினீயரிங் நிறுவனத்தில் தீ - 15 படை வீரர்கள் உயிரிழப்பு
|20 Jan 2023 6:08 AM IST
படுகாயம் அடைந்த 3 வீரர்கள் உடனடியாக மீட்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர்.
யெரெவன்,
ஆர்மேனியாவில் அஸாட் என்ற இடத்தில் உள்ள ராணுவ என்ஜினீயரிங் தொழிற்சாலையில் நேற்று திடீரென தீப்பிடித்தது. இந்தத் தீ மின்னல் வேகத்தில் பரவியது. இந்த விபத்தில், அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த படை வீரர்கள் 15 பேர் சிக்கி பலியாகினர்.
மேலும் 3 வீரர்கள் படுகாயம் அடைந்தனர். அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். அவர்களது நிலை கவலைக்கிடமாக உள்ளது. இந்த தீ விபத்தின் பின்னணி என்ன என்பது குறித்து உடனடியாக தெரியவரவில்லை.