நேட்டோ அமைப்பில் இணையும் ரஷியாவின் அண்டை நாடான பின்லாந்து - அதிகரிக்கும் பதற்றம்
|உலகின் மிகப்பெரிய ராணுவ கூட்டமைப்பாக நேட்டோ உள்ளது.
ஹெல்சின்கி,
உலகின் மிகப்பெரிய ராணுவ கூட்டமைப்பு நேட்டோ ஆகும். நேட்டோ ராணுவ கூட்டமைப்பில் மிகப்பெரிய ராணுவ பலத்துடன் அமெரிக்கா உள்ளது. இந்த ராணுவ கூட்டமைப்பில் பல்வேறு ஐரோப்பிய நாடுகள் உள்ளன.
அமெரிக்கா, பிரான்ஸ், ஜெர்மனி, துருக்கி உள்பட 30 நாட்கள் நேட்டோ அமைப்பின் உறுப்பு நாடுகளாக உள்ளன.
இதனிடையே, உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்ததையடுத்து ஐரோப்பிய நாடுகள் இடையே போர் அச்சம் ஏற்பட்டது. இதனால், ஐரோப்பிய நாடுகள் மீது ரஷியா தாக்குதல் நடத்தினால் அது 3-ம் உலகப்போருக்கு வழிவகுக்கும் என்ற அச்சம் நிலவி வருகிறது.
இந்நிலையில், நேட்டோ அமைப்பில் பின்லாந்து இணைய உள்ளது. நாளை முதல் நேட்டோ அமைப்பின் 31-வது உறுப்பு நாடாக பின்லாந்து இணைய உள்ளது.
ரஷியாவுடன் எல்லையை பகிரும் பின்லாந்து நேட்டோ அமைப்பில் இணைய உள்ளது. நேட்டோ அமைப்பில் பின்லாந்து இணைவதால் அந்த நாட்டிற்குள் நேட்டோ படைத்தளம், படைகள் குவிக்கப்படலாம். இது ரஷியாவுக்கு மேலும் நெருக்கடியை ஏற்படுத்தி உக்ரைன் மீதான போரை தீவிரப்படுத்த வழிவகுக்கும்.
பின்லாந்தை போன்று ஸ்வீடனும் நேட்டோ அமைப்பில் இணைய விண்ணப்பித்துள்ளது. ஸ்வீடன் மீதான விண்ணப்பம் இன்னும் பரீசிலனையில் உள்ள நிலையில் பின்லாந்து நாளை நேட்டோ அமைப்பில் இணைய உள்ளது. உக்ரைன் - ரஷியா இடையேயான போருக்கு மத்தியில் பின்லாந்து நேட்டோ அமைப்பில் இணைந்துள்ள சம்பவம் உலக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.