< Back
உலக செய்திகள்
சுவிட்சர்லாந்தில் ரெயில்கள் தடம் புரண்டு 12 பேர் படுகாயம்

Image Courtesy: AFP

உலக செய்திகள்

சுவிட்சர்லாந்தில் ரெயில்கள் தடம் புரண்டு 12 பேர் படுகாயம்

தினத்தந்தி
|
1 April 2023 10:31 PM IST

சுவிட்சர்லாந்தில் ரெயில்கள் தடம் புரண்டு 12 பேர் படுகாயம் அடைந்தனர்.

சுவிட்சர்லாந்தில் பெர்ன் மாகாணத்தில் நேற்று மாலை பலத்த புயல் காற்று வீசியது. அப்போது லுஷெர்ஸ் நகரம் அருகே கொண்டிருந்த 2 ரெயில்கள் திடீரென தண்டவாளத்தில் இருந்து விலகி தடம் புரண்டன. இதுகுறித்து மீட்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து விபத்தில் காயம் அடைந்தவர்களை மீட்கும் பணியில் அவர்கள் ஈடுபட்டனர். அப்போது படுகாயம் அடைந்த 3 குழந்தைகள் உள்பட 12 பேரை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் செய்திகள்