< Back
உலக செய்திகள்
உலக செய்திகள்
பிலிப்பைன்ஸ் நாட்டின் புதிய அதிபராக மார்கோஸ் ஜூனியர் பதவியேற்பு
|1 July 2022 12:07 AM IST
பிலிப்பைன்ஸ் நாட்டின் 17-வது அதிபராக மார்கோஸ் ஜூனியர் பதவியேற்றுக்கொண்டார்.
மணிலா,
பிலிப்பைன்ஸ் அதிபர் பதவியிலிருந்து ரோட்ரிகோ டுட்ரேட் விடைபெற்றதைத்தொடர்ந்து கடந்த மாதம் நடந்த தேர்தலில் வெற்றி பெற்ற பெர்டினாண்ட் மார்கோஸ் ஜூனியர் பிலிப்பைன்ஸின் அதிபராக இன்று பதவி ஏற்றார்.
பதவியேற்பு விழா பிலிப்பைன்ஸின் தேசிய அருகாட்சியகத்தில் நடந்தது. விழாவில் ஆயிரக்கணக்கானவர்கள் கலந்து கொண்டனர். பெர்டினாண்ட் மார்கோஸ் ஜூனியர், பிலிப்பைன்சில் சர்வாதிகாரமாக ஆட்சி செய்த பெர்டினாண்ட் மார்கோசின் மகன் ஆவார்.
தலைநகர் மணிலாவில் உள்ள தேசிய அருங்காட்சியகத்தில் ஆயிரக்காணக்கான பொதுமக்கள், சீன துணை அதிபர் வாங் கிஷன், அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிசின் கணவர் உள்ளிட்ட வெளிநாட்டு பிரமுகர்கள் முன்னிலையில் அவர் இன்று பதவியேற்றுக்கொண்டார்.