< Back
உலக செய்திகள்
ஆப்கானிஸ்தானில் போராட்டம் நடத்திய பெண்களை அடித்து விரட்டிய தலீபான்கள்

Photo Credit:AFP

உலக செய்திகள்

ஆப்கானிஸ்தானில் போராட்டம் நடத்திய பெண்களை அடித்து விரட்டிய தலீபான்கள்

தினத்தந்தி
|
14 Aug 2022 11:48 AM IST

ஆப்கானிஸ்தானில் தலீபான்கள் ஆட்சியை கைப்பற்றி ஒராண்டு நிறைவடைந்துள்ளது.

காபூல்,

தலீபான்கள் ஆட்சி நடைபெற்று வரும் ஆப்கானிஸ்தானில் கடுமையான சட்டதிட்டங்கள் அமலில் உள்ளன. குறிப்பாக பெண்களுக்கு எதிரான பல கட்டுப்பாடுகள் அங்கு அமலில் உள்ளன. உயர்கல்வி கற்க தடை உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் பெண்களுக்கு விதிக்கப்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தானில் ஆட்சியை தலீபான்கள் கைப்பற்றி நாளையுடன் ஒரு ஆண்டு முடிவடைகிறது. இந்த நிலையில், தலைநகர் காபூலில் உள்ள கல்வி அமைச்சக கட்டிடம் முன்பு பெண்கள் திடீரென்று போராட்டத்தில் ஈடுபட்டனர். தங்களுக்கு வேலை, அரசியலில் பங்கேற்கும் உரிமை கோரி கோஷங்களை எழுப்பினர்.

அவர்களை தலீபான்கள் தடுத்து நிறுத்த முயற்சித்தனர். ஆனால் பெண்கள் முன்னேறி செல்ல முயன்றதால் தலிபான்கள் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இதனால் கலைந்து ஓடிய பெண்களை விரட்டி சென்று துப்பாக்கியால் தாக்கினர். மேலும் போராட்டத்தை படம் பிடித்த பத்திரிகையாளர்களையும் தலிபான்கள் அடித்து விரட்டனர்.

மேலும் செய்திகள்