< Back
உலக செய்திகள்
கோஸ்டாரிகா உயிரியல் பூங்காவில் ஆண் துணையின்றி தானாக கருத்தரித்த பெண் முதலை!
உலக செய்திகள்

கோஸ்டாரிகா உயிரியல் பூங்காவில் ஆண் துணையின்றி தானாக கருத்தரித்த பெண் முதலை!

தினத்தந்தி
|
10 Jun 2023 12:35 AM IST

16 ஆண்டுகளாக அடைத்து வைத்து வளர்க்கப்பட்ட பெண் முதலை, சமீபத்தில் 14 முட்டைகளை இட்டது.

சான் ஜோஸ்,

ஆண் துணை இல்லாமல் தன்னை கர்ப்பமாக்கிக் கொண்ட பெண் முதலை கோஸ்டாரிகா நாட்டில் உள்ள உயிரியல் பூங்காவில் முதல்முறையாக அடையாளம் காணப்பட்டு உள்ளது. அந்த முதலை 99.9 சதவீதம் மரபணு ரீதியாக தன்னைப் போன்ற ஒரு கருவை உருவாக்கி உள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.

அமெரிக்காவில் உள்ள வர்ஜீனியா பாலிடெக்னிக் கல்லூரி மற்றும் ஸ்டேட் யுனிவர்சிட்டி ஆராய்ச்சியாளர்கள் கொண்ட குழு, இந்த கண்டுபிடிப்பை நிகழ்த்தியது. பறவைகள், பல்லிகள் மற்றும் பாம்புகள் போன்ற ஊர்வன மற்றும் சில மீன்கள் உள்ளிட்ட பல்வேறு வகையான உயிரினங்களில் இந்த வகை கர்ப்பம் தரித்தல் நிகழ்வது உண்டு. முதலை இனத்தில் இது மிகவும் அரிதான நிகழ்வாகும்.

இதற்கு பேகல்டேட்டிவ் பார்த்தீனோ ஜெனீசிஸ் என்று பெயர். 16 ஆண்டுகளாக அடைத்து வைத்து வளர்க்கப்பட்ட அந்த பெண் முதலை, சமீபத்தில் 14 முட்டைகளை இட்டது, அவற்றில் ஒன்றில் முழுமையாக உருவான கரு இருந்தது. ஆனால் அது இறந்து பிறந்தது. சமீப காலமாக முதலைகளில் இதுபோன்ற இனப்பெருக்கம் சற்று அதிகரித்து இருப்பதாக ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்