< Back
உலக செய்திகள்
அமெரிக்காவில் இந்திய டாக்டர் சுட்டுக்கொலை
உலக செய்திகள்

அமெரிக்காவில் இந்திய டாக்டர் சுட்டுக்கொலை

தினத்தந்தி
|
26 Aug 2024 10:36 AM IST

அமெரிக்காவில் வசித்த இந்திய டாக்டர் ரமேஷ் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

வாஷிங்டன்,

ஆந்திரா மாநிலம், திருப்பதி மாவட்டத்தை சேர்ந்தவர் டாக்டர் ரமேஷ் பாபு பெரம்செட்டி. குடும்பத்துடன் அமெரிக்காவில் குடியேறிய ரமேஷ் பாபு பெரம்செட்டி. அமெரிக்காவின் அலபமா மாகாணத்தில் மிகவும் பிரபலமான மருத்துவர்களில் ஒருவராக இருந்தார். அவசர சிகிச்சை மற்றும் குடும்ப மருத்துவத்தில் நிபுணத்துவம் பெற்ற இவர், மருத்துவ சிகிச்சையில் 38 வருட அனுபவம் கொண்டவர் ஆவார்.

பல்வேறு நலத்திட்டங்களையும் செய்து வந்த இவர், அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். டஸ்கலூசா நகரில், இந்த கொடூர சம்பவம் நடைபெற்றுள்ளது. மருத்துவர் கொலைக்கான காரணம் குறித்து அங்குள்ள போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். கொரோனா காலத்தில் உள்ளூர் மக்களுக்கு சிறப்பான மருத்துவ சேவை அளித்து பலரது உயிரை காப்பாற்றி சேவை செய்துள்ளார். இதற்காக ஏராளமான விருதுகளும் அவர் பெற்றுள்ளார்.

மேலும் செய்திகள்