< Back
உலக செய்திகள்
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு முன் ஜாமீன் நீட்டிப்பு
உலக செய்திகள்

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு முன் ஜாமீன் நீட்டிப்பு

தினத்தந்தி
|
25 Aug 2022 4:23 PM IST

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கானுக்கு செப்டம்பர் 1-ந் தேதி வரை ஜாமீன் வழங்கி இஸ்லமாபாத் ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

இஸ்லமாபாத்,

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு எதிராக பயங்கரவத தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய இம்ரான் கான், போலீஸ் உயர் அதிகாரிகளியும் நீதிபதியை மிரட்டும் வகையில் பேசியதாக இம்ரான் கானுக்கு எதிராக வழக்குபதிவு செய்யப்பட்டு இருந்தது.

இதைத் தொடர்ந்து இம்ரான் கான் எப்போது வேண்டும் என்றாலும் கைதாக கூடும் என்று பாகிஸ்தானில் பரபரப்பு நிலவியது. இந்த நிலையில், கடந்த 22-ந் தேதி இஸ்லமாபாத் ஐகோர்ட் இம்ரான்கானுக்கு 3 நாள் முன் ஜாமீன் வழங்கியது. அவருக்கு வழங்கப்பட்ட முன்ஜாமீன் இன்றுடன் நிறைவடைவதை அடுத்து அவர் கைது செய்யப்படுவார் என தகவல் வெளியானது.

இந்த நிலையில், இம்ரான்கானுக்கு வழங்கப்பட்ட முன் ஜாமீனை நீட்டித்து இஸ்லமாபாத் ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. வருகிற செப்டம்பர் 1-ந் தேதி வரை ஜாமீன் வழங்கி ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

மேலும் செய்திகள்