< Back
உலக செய்திகள்
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கானுக்கு ஜாமீன் நீட்டிப்பு
உலக செய்திகள்

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கானுக்கு ஜாமீன் நீட்டிப்பு

தினத்தந்தி
|
25 March 2023 9:42 PM IST

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கானுக்கு லாகூர் ஐகோர்ட்டு ஜாமீன் திங்கட்கிழமை வரை நீட்டித்து உத்தரவிட்டது.

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் மீது பண மோசடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த வழக்குகள் தொடர்பான விசாரணைக்கு ஆஜராகாததால் இம்ரான்கானை கைது செய்ய பிடிவாரண்டு பிறப்பித்து கோர்ட்டு உத்தரவிட்டது. பிடிவாரண்டை ரத்து செய்ய கோரி இம்ரான்கான் தரப்பில் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இதனை விசாரித்த லாகூர் ஐகோர்ட்டு இம்ரான்கானை கைது செய்ய தடை விதித்ததோடு, 5 வழக்குகளில் கடந்த 24-ந் தேதி வரை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. இந்தநிலையில் ஜாமீனை நீட்டிக்க கோரி இம்ரான்கான் தரப்பில் தாக்கல் செய்த மனுவை விசாரித்த கோர்ட்டு அவரது ஜாமீனை திங்கட்கிழமை வரை நீட்டித்து உத்தரவிட்டது.

மேலும் செய்திகள்