< Back
உலக செய்திகள்
உலக செய்திகள்
காசாவில் இருந்து பொதுமக்கள் உடனே வெளியேற வேண்டும்: இஸ்ரேல் ராணுவம் எச்சரிக்கை
|11 July 2024 9:30 PM IST
காசாவில் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.
காசா,
பாலஸ்தீனத்தில் ஹமாஸ் அமைப்பினர் கட்டுப்பாட்டில் உள்ள காசாவில் கடந்த 7 மாதங்களுக்கு மேலாக இஸ்ரேல் படையினர் கடும் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்த போரில் 38 ஆயிரம் பேர் வரை பலியாகி விட்டனர். இந்த நிலையில் காசாவில் இறுதி கட்ட போருக்கு இஸ்ரேல் தயாராகி வருகிறது. கடந்த 2 வாரமாக தனது தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ளது. இதையடுத்து காசாவில் இருந்து பொதுமக்கள் பாதுகாக்கப்பட்ட பாதை வழியாக உடனே வெளியேறுமாறு இஸ்ரேல் ராணுவம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
ரீப் போர் நடவடிக்கையை அதிகப்படுத்த இருப்பதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. காசாவில் தற்போது 3 லட்சத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இஸ்ரேல் ராணுவம் எச்சரிக்கையால் அவர்கள் பீதி அடைந்துள்ளனர், இஸ்ரேலின் இந்த நடவடிக்கை மிகவும் கவலை அளிப்பதாக ஐ.நா. தெரிவித்து இருக்கிறது.