< Back
உலக செய்திகள்
தென்கொரியாவில் எஸ்கலேட்டர் பழுதாகி விபத்து - 14 பேர் காயம்
உலக செய்திகள்

தென்கொரியாவில் எஸ்கலேட்டர் பழுதாகி விபத்து - 14 பேர் காயம்

தினத்தந்தி
|
9 Jun 2023 2:20 AM IST

எஸ்கலேட்டர் கீழ் நோக்கி நகர்ந்ததால் அதில் சென்றவர்கள் நிலைதடுமாறி ஒருவர் மீது ஒருவர் விழுந்தனர்.

சியோல்,

தென்கொரியாவின் தலைநகர் சியோல் அருகே சியோங்னாம் பகுதியில் உள்ள சுரங்கப்பாதை வழியாக பலர் சென்றனர். அப்போது அங்குள்ள நகரும் படிக்கட்டை (எஸ்கலேட்டர்) பயன்படுத்தி சிலர் மேலே ஏறி கொண்டிருந்தனர். திடீரென அந்த எஸ்கலேட்டர் கீழ் நோக்கி நகர்ந்தது. இதனால் அதில் சென்றவர்கள் நிலைதடுமாறி ஒருவர் மீது ஒருவர் விழுந்தனர்.

உடனடியாக தொழில்நுட்ப குழுவினர் அங்கு வந்து அதனை சரிசெய்தனர். எனினும் இந்த விபத்தில் சிறுவர்கள் உள்பட 14 பேர் காயம் அடைந்தனர். அவர்களை மீட்பு படையினர் மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அதில் படுகாயம் அடைந்த 3 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும் செய்திகள்