< Back
உலக செய்திகள்
உக்கிரமாகி வரும் உக்ரைன் போர் - அவசரவசரமாக வெளியேற்றப்படும் மக்கள்
உலக செய்திகள்

உக்கிரமாகி வரும் உக்ரைன் போர் - அவசரவசரமாக வெளியேற்றப்படும் மக்கள்

தினத்தந்தி
|
6 May 2023 5:58 PM IST

ரஷியாவின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் பகுதியளவு மக்களை வெளியேற்றும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

கீவ்,

போர் உக்கிரமாகி வரும் நிலையில், தெற்கு உக்ரைனில் ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் பகுதியளவு மக்களை வெளியேற்றும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

உக்ரைன் தரப்பு ரஷ்ய கட்டுப்பாட்டில் உள்ள சொந்த நகரங்கள் மீதே தாக்குதல்களைத் தீவிரப்படுத்தியுள்ள நிலையில், ஜாபோர்ஜியா அணுமின் நிலையம் அமைந்துள்ள பகுதி உட்பட 18 இடங்களில் இருந்து குழந்தைகள், வயதானவர்கள், நோயாளிகள், மாற்றுத்திறனாளிகள், பெண்கள் ஆகியோர் முதற்கட்டமாக வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.

மேலும் செய்திகள்