< Back
உலக செய்திகள்
இங்கிலாந்து இளவரசி கேட் மிடில்டனுக்கு அறுவை சிகிச்சை - மருத்துவமனையில் அனுமதி

Image Courtesy : AFP

உலக செய்திகள்

இங்கிலாந்து இளவரசி கேட் மிடில்டனுக்கு அறுவை சிகிச்சை - மருத்துவமனையில் அனுமதி

தினத்தந்தி
|
18 Jan 2024 12:42 AM IST

அடுத்த சில நாட்களுக்கு கேட் மிடில்டன் மருத்துவமனையில் தங்கியிருந்து சிகிச்சை பெறுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

லண்டன்,

இங்கிலாந்து இளவரசர் வில்லியமின் மனைவியான இளவரசி கேட் மிடில்டன் லண்டனில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அங்கு அவருக்கு வயிற்றில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இது தொடர்பாக கென்சிங்டன் அரண்மனை வெளியிட்டுள்ள அறிக்கையில், இளவரசி கேட் மிடில்டனுக்கு அறுவை சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது என்றும், அடுத்த 10 முதல் 14 நாட்களுக்கு அவர் மருத்துவமனையில் தங்கியிருந்து சிகிச்சை பெறுவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இளவரசி மருத்துவமனையில் இருந்து திரும்பும்வரை இளவரசர் வில்லியம் தனது அரசவை பணிகளை ஒத்திவைப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்