< Back
உலக செய்திகள்
ஜெர்மனியில் எரிசக்தி மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை கடும் உயர்வு - பொதுமக்கள் போராட்டம்
உலக செய்திகள்

ஜெர்மனியில் எரிசக்தி மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை கடும் உயர்வு - பொதுமக்கள் போராட்டம்

தினத்தந்தி
|
12 Oct 2022 10:37 PM IST

எரிபொருள் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை கண்டித்து பெர்லினில் போராட்டம் நடைபெற்றது.

பெர்லின்,

ரஷியா மீது சர்வதேச நாடுகள் விதித்துள்ள பொருளாதார தடை காரணமாக சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளது. இதனால் பல்வேறு ஐரோப்பிய நாடுகளில் எரிவாயு மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. ரஷியாவிடம் எரிவாயு இறக்குமதியை நம்பி இருந்த நாடுகள் பெரிதும் பாதிக்கப்ப்பட்டுள்ளன.

அந்த வகையில் இங்கிலாந்தில் பெட்ரோல், டீசல் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. ஜெர்மனியின் நுகர்வோர் விலை குறியீடு செப்டம்பர் மாதத்தில் கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட 10% உயர்ந்துள்ளது. இது ஜெர்மனியில் 1951-ம் ஆண்டுக்கு பிறகு ஏற்பட்டுள்ள மிகப்பெரிய பணவீக்கம் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் எரிபொருள் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை கண்டித்து ஜெர்மனியின் தலைநகர் பெர்லினில் உள்ள நாடாளுமன்ற கீழ்சபை கட்டிடத்திற்கு வெளியே ஜெர்மனியின் எதிர்கட்சி சார்பில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டனர். விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த அரசு தீவிர நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்