< Back
உலக செய்திகள்
டிரம்ப் பதிவுகளை வழங்க தாமதம்: டுவிட்டர் நிறுவனத்துக்கு ரூ.2.9 கோடி அபராதம்

கோப்புப்படம்

உலக செய்திகள்

டிரம்ப் பதிவுகளை வழங்க தாமதம்: டுவிட்டர் நிறுவனத்துக்கு ரூ.2.9 கோடி அபராதம்

தினத்தந்தி
|
10 Aug 2023 11:51 PM GMT

டிரம்ப் பதிவுகளை வழங்க தாமதம் செய்ததாக டுவிட்டர் நிறுவனத்துக்கு ரூ.2.9 கோடி அபராதம் விதித்து அமெரிக்க கோர்ட்டு தீர்ப்பளித்தது.

வாஷிங்டன்,

டுவிட்டர் என்று பிரபலமாக அறியப்பட்ட சமூக வலைத்தளம் தற்போது எக்ஸ் என்று பெயர் மாற்றம் பெற்று இயங்கி வருகிறது. அமெரிக்காவின் கொலம்பியா மாவட்ட கோர்ட்டில் ஒரு குற்ற வழக்கில் முன்னாள் அதிபர் டிரம்ப் பற்றிய டுவிட்டர் பதிவுகளை வழங்க அந்த நிறுவனத்துக்கு கோர்ட்டு உத்தரவிட்டு இருந்தது. தேடுதல் வாரண்டும் பிறப்பித்து இருந்தது.

ஆனால் டுவிட்டர் நிறுவனம் கோர்ட்டு கேட்ட தகவல்களை வழங்க தாமதம் செய்து வந்தது. இந்த நிலையில் குறிப்பிட்ட காலத்திற்கு மேலும் தகவல்களை தர தாமதம் செய்ததாக கூறி டுவிட்டர் நிறுவனத்துக்கு ரூ.3.5 லட்சம் அமெரிக்க டாலர் அபராதமாக விதித்து கோர்ட்டு நேற்றுமுன்தினம் உத்தரவு பிறப்பித்தது. இது இந்திய மதிப்பில் ரூ.2.89 கோடியாகும்.

மேலும் செய்திகள்