< Back
உலக செய்திகள்
எலான் மஸ்க்-க்கு வந்த சோதனை - திட்டத்தை நிறுத்தி வைத்த நாசா
உலக செய்திகள்

எலான் மஸ்க்-க்கு வந்த சோதனை - திட்டத்தை நிறுத்தி வைத்த நாசா

தினத்தந்தி
|
16 Jun 2022 6:22 AM IST

சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு தேவையான பொருட்களை ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் மூலம் அனுப்பும் திட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

வாஷிங்டன்,

ரஷியா, அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் கூட்டு முயற்சியில் உருவாக்கப்பட்ட சர்வதேச விண்வெளி நிலையத்தில் தற்போது ஏழு விண்வெளி வீரர்கள் உள்ளனர்.

இவர்களுக்கு தேவையான உணவு மற்றும் இதர பொருட்கள் எலன் மஸ்கிற்கு சொந்தமான ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தில் டிராகன் விண்கலத்தின் மூலம் ஜூன் 12 ல் அனுப்ப திட்டமிட்டிருந்தது. ஆனால், டிராகன் விண்கலத்தில் திரவ எரிபொருள் கசிவு ஏற்படுவது கண்டறியப்பட்டுள்ளது.இதனை தொடர்ந்து டிராகன் விண்கலத்தை விண்ணில் ஏவும் திட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

டிராகன் விண்கலத்தில் உள்ள திரவ எரிபொருள் வெளியேற்றப்பட்டு கசிவுக்கு காரணமான வால்வு இணைப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதை நீக்கிவிட்டு புதிய வால்வு பொருத்தப்படவுள்ளது. இந்த நிலையில், ஜூலை 11 க்கு முன்னதாக டிராகன் விண்கலம் விண்ணில் அனுப்பப்படாது என்று நாசா அறிவித்துள்ளது.

மேலும் செய்திகள்