< Back
உலக செய்திகள்
ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் ஸ்டார்ஷிப்பை அடுத்த மாதம் விண்ணில் செலுத்தும்: எலான் மஸ்க் தகவல்
உலக செய்திகள்

ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் ஸ்டார்ஷிப்பை அடுத்த மாதம் விண்ணில் செலுத்தும்: எலான் மஸ்க் தகவல்

தினத்தந்தி
|
5 Feb 2023 6:58 AM IST

இந்த வகையை சேர்ந்த ராக்கெட்டை தான் நாசா, நிலவுக்கு மனிதர்களை அழைத்துச்செல்வதற்காக தேர்ந்தெடுத்து உள்ளது.

வாஷிங்டன்,

எலோன் மஸ்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனமானது ஸ்டார்ஷிப் என்ற ராக்கெட் அமைப்பை உருவாக்கி சோதித்து வருகிறது. இந்த ஸ்டார்ஷிப், மனிதர்களை பிற கிரகத்திற்கு அழைத்துச்செல்லும் வகையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த வகையை சேர்ந்த ராக்கெட்டை தான் நாசா, அடுத்த ஆண்டு நிலவுக்கு மனிதர்களை அழைத்துச்செல்வதற்காக தேர்ந்தெடுத்து உள்ளது.

கடந்த மாதம் எலான் மஸ்க், ஸ்டார்ஷிப்பை அடுத்த மாதம் விண்ணில் செலுத்துவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக தெரிவித்தார். இந்த நிலையில், அடுத்த மாதம் ஸ்டார்ஷிப் ராக்கெட் சிஸ்டத்தை அறிமுகப்படுத்தலாம் என எலான் மஸ்க் தெரிவித்தார்.

மீதமுள்ள சோதனைகள் சரியாக நடந்தால், அடுத்த மாதம் ஸ்டார்ஷிப் தொடங்க முயற்சிப்போம்," என்று ஸ்டார்ஷிப் பற்றிய பயனரின் ட்வீட்டிற்கு பதிலளித்த மஸ்க் கூறினார்.

மேலும் செய்திகள்