< Back
உலக செய்திகள்
உலக செய்திகள்
இஸ்ரேல் சென்றடைந்தார் எலான் மஸ்க் - பிணைக்கைதிகளின் குடும்பத்தினரை சந்திக்கிறார்...!
|27 Nov 2023 1:18 PM IST
டெஸ்லா நிறுவனத்தின் தலைவராக எலான் மஸ்க் செயல்பட்டு வருகிறார்.
வாஷிங்டன்,
டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ், டுவிட்டர் (எக்ஸ்) நிறுவனங்களின் தலைவராக செயல்பட்டு வருபவர் எலான் மஸ்க். உலகின் பெரும் பணக்காரரான எலான் மஸ்க் சமீபத்தில் இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போர் குறித்து கருத்து தெரிவித்திருந்தார்.
அதேபோல், யூத சமூகத்திற்கு எதிராகவும் கருத்து தெரிவித்தார். மேலும், இஸ்ரேல்-ஹமாஸ் இடையேயான போர் தொடர்பாக டுவிட்டரில் பரவும் தவறான தகவல்கள், வீடியோக்களை அகற்ற எலான் மஸ்க் போதிய நடவடிக்கை எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டுகளும் எழுந்தன.
இந்நிலையில், எலான் மஸ்க் இன்று இஸ்ரேல் சென்றடைந்தார். டெல் அவிவ் சென்றடைந்த எலான் மஸ்க் இஸ்ரேல் அதிபர் ஐசக் ஹெர்சாக்கை சந்திக்க உள்ளார். பின்னர், ஹமாஸ் ஆயுதக்குழுவினரால் கடத்தப்பட்ட இஸ்ரேலியர்களின் குடும்பத்தினரை சந்தித்து எலான் மஸ்க் ஆறுதல் கூற உள்ளார்.