< Back
உலக செய்திகள்
அண்டார்டிகாவிலும் நுழைந்த எலான் மஸ்கின் ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் இணைய சேவை

Image Courtesy: AFP 

உலக செய்திகள்

அண்டார்டிகாவிலும் நுழைந்த எலான் மஸ்கின் ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் இணைய சேவை

தினத்தந்தி
|
19 Sept 2022 6:25 PM IST

ஸ்பேஸ்-எக்ஸ் நிறுவனம் ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் வழியாக இணைய சேவையை வழங்கி வருகிறது.

கலிபோர்னியா,

உலகின் முன்னணி பணக்காரரான எலான் மஸ்க்கிற்கு சொந்தமான ஸ்பேஸ்-எக்ஸ் நிறுவனம், ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் வழியாக இணைய சேவையை உலகின் பல நாடுகளில் வழங்கி வருகிறது.

உலகின் 7 கண்டங்களில் அண்டார்டிகாவில் மட்டும் ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் வழி இணைய சேவை இல்லாமல் இருந்தது. இந்த நிலையில் ஸ்டார்லிங்க் சேவை அண்டார்டிகாவிற்கும் தற்போது சென்று அடைந்துள்ளது.

இது குறித்து எலான் மஸ்க் இன்று வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், "ஸ்டார்லிங்க் இப்போது அண்டார்டிகா உட்பட அனைத்து கண்டங்களிலும் செயலில் உள்ளது" என தெரிவித்துள்ளார்.

கடந்த வாரம், ஸ்பேஸ்எக்ஸ் அதன் ஸ்டார்லிங்க் இணைய முனையங்களில் ஒன்றை அண்டார்டிகாவில் உள்ள மெக்முர்டோ நிலையத்தில் சோதனை செய்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்