< Back
உலக செய்திகள்
டெஸ்லாவில் வேலை  வேண்டுமா ? - டுவிட்டரில் விளம்பரம் செய்த எலான் மஸ்க் - குவியும் பதில்கள்

Image Courtesy : AFP 

உலக செய்திகள்

டெஸ்லாவில் வேலை வேண்டுமா ? - டுவிட்டரில் விளம்பரம் செய்த எலான் மஸ்க் - குவியும் பதில்கள்

தினத்தந்தி
|
23 May 2022 10:51 AM IST

டெஸ்லா நிறுவனத்தில் பணிபுரிய எலான் மஸ்க் டுவிட்டரில் விளம்பரம் செய்துள்ளார்.

வாஷிங்டன்,

டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரியும், உலகின் பெரும் பணக்காரருமான எலான் மஸ்க் டுவிட்டரை வாங்குவதாக அறிவித்தது முதல் சர்வதேச அளவில் கவனம் பெறும் நபராக மாறினார்.

இவர் சமீபத்தில் டுவிட்டரில் டெஸ்லா நிறுவனத்தில் பணிபுரிய ஒரு விளம்பரத்தை வெளியிட்டார். அதில், "டெஸ்லா ஒரு ஹார்ட்கோர் வழக்குத் துறையை உருவாக்குகிறது, அங்கு நாங்கள் நேரடியாக வழக்குகளைத் தொடங்குகிறோம் மற்றும் செயல்படுத்துகிறோம். அந்த குழு நேரடியாக என்னிடம் தெரிவிக்கும்.

இந்த திறனுக்கான சான்றுகளை விவரிக்கும் 3 முதல் 5 பதில் புள்ளிகளை அனுப்புங்கள் " என பதிவிட்டு இருந்தார்.

இந்த நிலையில் தற்போது மஸ்க்-யின் இந்த பதிவுக்கு பலர் பதில் அளித்து வருகின்றனர். ஒருபுறம் இதை வாய்ப்பாக கருதி பலர் அதற்கு தொடர்புடைய பதில்களை பதிவிட்டு வந்தாலும் மற்றொரு பக்கம் சிலர் கேலியான பதிவுகளையும் பதிலாக அளித்து வருகின்றனர்.

அவரின் இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.



மேலும் செய்திகள்