< Back
உலக செய்திகள்
எக்ஸ் செயலி மூலம் விரைவில்  பண பரிமாற்றம் செய்யலாம்: எலான் மஸ்க் சொல்கிறார்
உலக செய்திகள்

எக்ஸ் செயலி மூலம் விரைவில் பண பரிமாற்றம் செய்யலாம்: எலான் மஸ்க் சொல்கிறார்

தினத்தந்தி
|
24 Dec 2023 3:55 PM IST

ட்விட்டர் தளத்தை எலான் மஸ்க் வாங்கியதில் இருந்தே பல்வேறு அதிரடி மாற்றங்களை மேற்கொண்டு வருகிறார்.

வாஷிங்டன்,

உலக பெரும் பணக்காரரான எலான் மஸ்க், டுவிட்டர் நிறுவனத்தை கடந்த ஆண்டு விலைக்கு வாங்கினார். அதுமுதல் ஆட்குறைப்பு, எக்ஸ் என பெயர் மாற்றம் உள்ளிட்ட பல்வேறு அதிரடி மாற்றங்களை செய்து வருகிறார். அந்தவகையில் தற்போது எக்ஸ் செயலியில் பண பரிமாற்றம் செய்யும் வசதியும் அறிமுகப்படுத்தப்பட உள்ளது என்று கூறியிருக்கிறார்.

இதுகுறித்து எலான் மஸ்க் நிருபர்களிடம் கூறுகையில், `எக்ஸ் செயலி மூலம் மற்றவர்களுக்கு பண பரிமாற்றம் செய்யும் உரிமம் பெற அரசாங்கத்தின் ஒப்புதலுக்காக காத்திருக்கிறோம். இறுதி ஒப்புதல் வந்த பிறகு அடுத்த ஆண்டின் (2024) நடுப்பகுதியில் எக்ஸ் செயலி மூலம் பண பரிமாற்றம் செய்ய முடியும்' எனக் கூறினார்.

மேலும் செய்திகள்