< Back
உலக செய்திகள்
ஆஸ்திரியாவில் பனிச்சரிவில் சிக்கி 8 பேர் பலி
உலக செய்திகள்

ஆஸ்திரியாவில் பனிச்சரிவில் சிக்கி 8 பேர் பலி

தினத்தந்தி
|
6 Feb 2023 3:18 AM IST

ஆஸ்திரியாவில் பனிச்சரிவில் சிக்கி 8 பேர் பலியாகினர்.

வியன்னா [ஆஸ்திரியா],

ஆஸ்திரியாவின் மேற்குப் பகுதியில் இந்த வார இறுதியில் ஏற்பட்ட பனிச்சரிவுகளில் சிக்கி குறைந்தது எட்டு பேர் உயிரிழந்துள்ளாதாக போலீசார் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதுதொடர்பாக வெளியாகி உள்ள அறிக்கையின்படி, காற்று மற்றும் பனிப்பொழிவு காரணமாக பனிச்சரிவு அபாயங்கள் அதிகமாக இருந்ததாக டைரோல் மற்றும் வோரல்பேர்க் பிராந்தியங்களில் உள்ள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

முன்னதாக பள்ளி விடுமுறையைக் கொண்டாடும் விதமாக ஏராளமானோர் பனிச்சறுக்கு விளையாடி கொண்டிருந்தனர். அப்போது அங்கு திடீரென பெரும் பனிச்சரிவு ஏற்பட்டது. எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தபோதும் இந்த பனிச்சரிவில் சிக்கி 8 பேர் பரிதாபமாக இறந்தனர் என போலீசார் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்