< Back
உலக செய்திகள்
ஈக்வடார்: அரசின் பொருளாதார கொள்கைக்கு எதிர்ப்பு - வன்முறையாக மாறிய ஆர்ப்பாட்டம்
உலக செய்திகள்

ஈக்வடார்: அரசின் பொருளாதார கொள்கைக்கு எதிர்ப்பு - வன்முறையாக மாறிய ஆர்ப்பாட்டம்

தினத்தந்தி
|
16 Jun 2022 6:48 AM IST

ஈக்வடார் நாட்டின் பொருளாதார கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து பழங்குடியர் அமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஈக்வடார்,

ஈக்வடார் நாட்டின் பொருளாதார கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து பழங்குடியர் அமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது சாலை மறியலில் ஈடுபட்டதாக பழங்குடியின அமைப்பின் தலைவரை போலீசார் கைது செய்தனர்.

இதையடுத்து தலைநகரில் பேரணியில் ஈடுபட்ட அவரது ஆதரவாளர்கள் திடீரென வன்முறையில் ஈடுபட்டனர். அப்போது போலீசாரின் வாகனத்திற்கு தீ வைத்து தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த நிலையில், பொது சொத்துக்களுக்கு சேதம் விளைவிப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்நாட்டு அதிபர் உத்தரவிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்