ஈகுவேடார்: ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி 8 பேர் பலி
|வெள்ளத்தில் பாதிப்படைந்த மக்களுக்கு வேண்டிய நிவாரண பொருட்களை ஏற்றி கொண்டு ராணுவ ஹெலிகாப்டர் ஒன்று புறப்பட்டு சென்றது.
குவிட்டோ,
ஈகுவேடார் நாட்டின் பாஸ்தஜா மாகாணத்தின் டிவினோ மாவட்டத்தில் வெள்ளம் எதிரொலியாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது. அவர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டு வேறு இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
இந்நிலையில், அவர்களுக்கு வேண்டிய உணவு, மருந்து, போர்வை உள்ளிட்ட நிவாரண பொருட்களை வழங்குவதற்காக ராணுவ ஹெலிகாப்டர் ஒன்று நேற்று புறப்பட்டு சென்று உள்ளது.
அந்த ஹெலிகாப்டர் புறப்பட்ட சிறிது நேரத்தில் திடீரென விபத்திற்குள்ளானது. இந்த சம்பவத்தில், வீரர்கள் 5 பேர் மற்றும் பொதுமக்களில் 3 பேர் என மொத்தம் 8 பேர் உயிரிழந்து உள்ளனர். அவர்களின் உடல்களை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்கு கொண்டு சென்றனர்.
இந்த விபத்துபற்றி ஈகுவேடார் ராணுவம் வெளியிட்ட அறிக்கை ஒன்றில், இந்த துரதிர்ஷ்டவச சம்பவம் ஏற்பட்டதற்கான காரணம் பற்றி விசாரிக்க விபத்து விசாரணை குழு ஒன்று உடனடியாக அமைக்க உத்தரவிடப்பட்டு உள்ளது என தெரிவித்து உள்ளது.