< Back
உலக செய்திகள்
ரஷிய சார்பு மதகுருக்கள் மீது பொருளாதார தடை - உக்ரைன் அரசு நடவடிக்கை
உலக செய்திகள்

ரஷிய சார்பு மதகுருக்கள் மீது பொருளாதார தடை - உக்ரைன் அரசு நடவடிக்கை

தினத்தந்தி
|
4 Dec 2022 9:33 PM IST

உக்ரைனில் உள்ள ரஷிய சார்பு கிறிஸ்தவ மதகுருக்கள் மீது பொருளாதார தடை விதித்து உக்ரைன் அரசு உத்தரவிட்டுள்ளது.

கீவ்,

உக்ரைன் மீது ரஷியா கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கிய போர் நடவடிக்கையானது, தற்போது வரை தொடர்ந்து வருகிறது. இந்த போரில் இருதரப்பிலும் பலத்த உயிர்சேதம் ஏற்பட்டுள்ளது. மேலும் உக்ரைனில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் அகதிகளாக வெளியேறியுள்ளனர்.

இருப்பினும் உக்ரைன் அரசு தொடர்ந்து ரஷியாவுக்கு பதிலடி கொடுத்து வருகிறது. இதற்காக இங்கிலாந்து, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் உக்ரைனுக்கு ராணுவ உதவிகளை செய்து வருகின்றன. இதன் மூலம் ரஷியாவிடம் இழந்த சில பகுதிகளையும் உக்ரைன் ராணுவம் மீட்டுள்ளது.

இந்த நிலையில் உக்ரைனில் உள்ள ரஷிய சார்பு கிறிஸ்தவ மதகுருக்கள் மீது பொருளாதார தடை விதித்து உக்ரைன் அரசு உத்தரவிட்டுள்ளது. ரஷிய சார்பு தேவாலயத்துடன் 10 மூத்த மதகுருக்கள் தொடர்பில் இருந்ததாகவும், ரஷிய அதிகாரிகளுடன் பணியாற்ற அவர்கள் ஒப்புக்கொண்டதாகவும் புகார்கள் எழுந்ததை தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்