< Back
உலக செய்திகள்
உலக செய்திகள்
கானாவில் கடும் பொருளாதார நெருக்கடி - அதிபர் பதவி விலகக் கோரி வலுக்கும் போராட்டம்
|6 Nov 2022 8:52 PM IST
கானா அதிபர் பதவி விலக வேண்டும் என அந்நாட்டு மக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
அக்ரா,
மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றாக கானாவில், பொருளாதாரம் கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளது. கடந்த செப்டம்பர் மாதம் அங்கு நிலவிய பொருளதார நெருக்கடி காரணமாக அத்தியாவசிய பொருட்களின் விலை கிடுகிடுவென உயர்ந்த நிலையில், பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
இதனால் அந்நாட்டு மக்கள் வீதிகளில் இறங்கி தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். போராட்டத்தில் ஈடுபடும் மக்கள் அந்நாட்டு அதிபர் நானா அகுஃபோ-அட்டோ பதவி விலக வேண்டும் என கோஷங்களை எழுப்பினர். மேலும் பொருளாதாரத்தை சீரமைக்க சர்வதேச நாணய நிதியத்துடன் கானா அரசு நடத்தும் பேச்சுவார்த்தை கேலிக்கூத்தானது என அவர்கள் தெரிவித்தனர்.