< Back
உலக செய்திகள்
அபாய எச்சரிக்கை...! பூமியில் வாழ்வதற்கான 8 பாதுகாப்பான வரம்புகளில் 7ஐ மனிதர்கள் தாண்டிவிட்டனர்...!
உலக செய்திகள்

அபாய எச்சரிக்கை...! பூமியில் வாழ்வதற்கான 8 பாதுகாப்பான வரம்புகளில் 7ஐ மனிதர்கள் தாண்டிவிட்டனர்...!

தினத்தந்தி
|
2 Jun 2023 5:15 PM IST

பூமியில் வாழ்வதற்கான 8 பாதுகாப்பான வரம்புகளில் 7ஐ மனிதர்கள் தாண்டிவிட்டனர் என ஒரு ஆய்வில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

வாஷிங்டன்

ஆப்பிரிக்காவிலிருந்து அமெரிக்கா வரை மிகவும் சிக்கலான 'ஹாட்ஸ்பாட்கள்'

நாம் விரைவில் விழித்துக் கொள்ளாவிட்டால், பூமியில் உள்ள உயிர்கள் அழிந்துவிடும் என பூமி ஆணையம் நடத்திய ஆய்வில் ஆச்சரியமூட்டும் தகவல்கள் வெளியிடப்பட்டு உள்ளன.

40 முன்னணி சர்வதேச இயற்கை மற்றும் சமூக விஞ்ஞானிகளைக் கொண்ட எர்த் கமிஷன் குழு பூமி எதிர்கொள்ளும் முக்கிய பிரச்சினைகள் மற்றும் அவற்றின் காரணங்கள் குறித்து சமீபத்தில் ஆய்வு நடத்தியது.

இதுகுறித்த அறிக்கை நேச்சர் இதழில் வெளியிடப்பட்டு உள்ளது. அதன் விவரம் வருமாறு:-

அதிகப்படியான வளங்கள் சுரண்டல், அலட்சியம், பல சுயநலக் குற்றங்களால் பூமியை நாசமாக்கிக் கொண்டிருக்கிறோம்.

மனித ஆதிக்கம் பூமியின் முக்கிய அமைப்புகளின் ஸ்திரத்தன்மையை படிப்படியாக சீர்குலைத்து வருகிறது.

எதிர்கால சந்ததியினர் மற்றும் பூமியில் உள்ள அனைத்து உயிரினங்களையும் நாம் பெரும் ஆபத்தில் ஆழ்த்துகிறோம்.

புவி வெப்பமடைதல், வறட்சி, கடும் வெள்ளம் போன்ற சீற்றங்களால் பூமியின் ஆக்கிரமிப்புகளை நாம் கவனிக்கவில்லை என்றால் நிலைமை கைமீற அதிக காலம் எடுக்காது.

ஆய்வின் ஒரு பகுதியாக, சமநிலை முற்றிலுமாக சீர்குலைந்து மிகவும் சிக்கலாக மாறிய பல பகுதிகளை ஆய்வுக் குழு கண்டறிந்து உள்ளது. இதனை ஹாட்ஸ்பாட் என அழைக்கிறார்கள். உலகெங்கிலும் உள்ள ஒவ்வொரு கண்டத்திலும் இதுபோன்ற ஹாட்ஸ்பாட்கள் இருப்பது கவலையளிக்கிறது என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

இதில் பல பகுதிகளில் ஏற்படும் பிரச்சனைக்கு பருவநிலை மாற்றமே முக்கிய காரணம் என கண்டறியப்பட்டுள்ளது.

குறிப்பாக ஆசியாவில் கிரையோஸ்பியர் மலை விரைவான மாற்றங்களுக்கு உட்பட்டு வருகிறது. பனிப்பாறைகள் உருகுவதில் தொடங்கி, நடக்கக்கூடாத அனைத்து எதிர்மறை விளைவுகளும் அபாயகரமான வேகத்தில் நடந்து வருகின்றன. இதன் விளைவாக, முழு பிராந்தியமும் மிக விரைவில் சமூக மற்றும் பொருளாதார எழுச்சிகளை சந்திக்கும்" என்று இணை ஆராய்ச்சியாளர் பேராசிரியர் கிறிஸ்டி ஏபி எச்சரித்து உள்ளார்.

நில பாதுகாப்பு தொடர்பாக சுமார் 8 வகையான குறிகாட்டிகள் முக்கியமானதாக சுற்றுச்சூழல் வல்லுநர்கள் கருதுகின்றனர். புவி ஆணையத்தின் ஆய்வில் 7 குறியீடுகள் அங்கீகரிக்கப்பட்ட வரம்பை தாண்டி ஆபத்தான நிலையை எட்டியுள்ளதாக முடிவு செய்யப்பட்டு உள்ளது.

► கிழக்கு ஐரோப்பா

► தெற்காசியா மத்திய கிழக்கு

► தென்கிழக்கு ஆசியா

► ஆப்பிரிக்காவில் பல பகுதிகள்

► பிரேசிலின் பல பகுதிகள்

► அமெரிக்காவில் பல பகுதிகள்

► மெக்சிகோ/சீனா

► பூமியானது சூழலியல் ரீதியாக பாதுகாப்பான நிலையை எப்போதோ கடந்துவிட்டது. நாளுக்கு நாள் ஆபத்தானதாக மாறி வருகிறது.

► பூமியில் வாழக்கூடிய தன்மையை உறுதி செய்யும் அனைத்து உயிர்-இயற்பியல் அமைப்புகளையும் சரிசெய்வது உடனடியாகத் தொடங்கப்பட வேண்டும்.

► அப்போது நிலக்கரி, எண்ணெய், இயற்கை எரிவாயு போன்ற முக்கிய வளங்களின் பற்றாக்குறையை பூமி தானாகவே மாற்றிக்கொள்ள முடியும்.

மேலும் செய்திகள்