< Back
உலக செய்திகள்
உலக செய்திகள்
இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 6.1 ஆக பதிவு
|18 Jan 2023 8:25 AM IST
இந்தோனேசியாவில் கடலுக்கு அடியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
ஜகார்த்தா,
பசிபிக் படுகையில் உள்ள எரிமலைகள் மற்றும் பூமத்திய கோடுகளின் வளைவான "ரிங் ஆப் பயர்" மீது இந்தோனேசியா இருப்பதால் அடிக்கடி பூகம்பங்கள் மற்றும் எரிமலை வெடிப்புகளால் பாதிக்கப்படுகிறது.
இந்நிலையில், இந்தோனேசியாவின் சுலாவேசி பகுதிகளில் இன்று அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது 6.1 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தின் மையம் கொரண்டலோவின் தென்கிழக்கே கடலுக்கு அடியில் 147 கிலோமீட்டர் (91 மைல்) தொலைவில் உணரப்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வின்படி, தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை. மேலும் நிலநடுக்கத்தால் பொருட்சேதம், உயிர்சேதம் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை. இந்தோனேசியாவில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுவதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.