< Back
உலக செய்திகள்
உலக செய்திகள்
ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.4 ஆக பதிவு
|11 Dec 2023 1:01 PM IST
பைசாபாத்தில் இருந்து 151 கிலோ மீட்டர் தெற்கு - தென்கிழக்கில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
காபுல்,
ஆப்கானிஸ்தானில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டது. காலை 8.04 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.4 ஆக பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கம் பைசாபாத்தில் இருந்து 151 கிலோ மீட்டர் தெற்கு - தென்கிழக்கில் சுமார் 180 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்டது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த விவரம் வெளியாகவில்லை.
ஆப்கானிஸ்தானில் இந்த மாதம் 5 ஆம் தேதி ரிக்டர் 4.5 அளவு நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. அக்டோபரில், ஆப்கானிஸ்தானின் ஹெராத் மாகாணத்தில் ரிக்டர் 6.3 அளவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் 4,000 க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர் மற்றும் ஆயிரக்கணக்கான வீடுகள் அழிந்தன.