< Back
உலக செய்திகள்
உலக செய்திகள்
தைவான் அருகே நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 5.0 ஆக பதிவு
|22 May 2024 5:44 PM IST
தைவான் அருகே ஏற்பட்ட நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 5.0 ஆக பதிவாகியுள்ளது.
பீஜிங்,
தைவானில் உள்ள ஹுவாலியன் மாகாணம் அருகே கடல் பகுதியில் இன்று மாலை 4 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.0 ஆக பதிவாகியுள்ளது.
இந்த நிலநடுக்கத்தின் மையமானது தரைமட்டத்தில் இருந்து சுமார் 10 கி.மீ. ஆழத்தில் அமைந்திருந்ததாக சீனாவின் புவியியல் ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. கடல் பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் ஹுவாலியன் கடற்கரை அருகே பல்வேறு இடங்களில் நிலஅதிர்வு உணரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.