< Back
உலக செய்திகள்
உலக செய்திகள்
தைவானில் நிலநடுக்கம்: ரிக்டரில் 5.3 ஆக பதிவு
|6 May 2024 6:01 PM IST
கிழக்கு ஆசிய நாடுகளில் ஒன்றான தைவானில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
தைவான்,
கிழக்கு ஆசிய நாடுகளில் ஒன்று தைவான். இங்கு சமீப காலமாக அடிக்கடி நிலநடுக்கங்கள் ஏற்படுகின்றன. இந்த நிலையில், அந்நாட்டின் கிழக்கு கடற்கரை மாவட்டமான ஹுவாலியன் கவுண்டியில் உள்ள கடல் பகுதியில் இன்றும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
உள்ளூர் நேரப்படி மாலை 5.45 மணிக்கு ஏற்பட்ட இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவில் 5.3 ஆக பதிவாகியுள்ளது. 20 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்த தகவல் ஏதும் வெளியாகவில்லை