< Back
உலக செய்திகள்
தைவானில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 4.0 ஆக பதிவு
உலக செய்திகள்

தைவானில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 4.0 ஆக பதிவு

தினத்தந்தி
|
2 May 2024 6:10 PM IST

தைவானில் இன்று ரிக்டர் 4.0 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

தைபெய்,

கிழக்கு ஆசிய நாடுகளில் ஒன்றான தைவானில் இன்று மதியம் 3.51 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 4.0 ஆக பதிவாகி உள்ளதாக அந்நாட்டின் மத்திய வானிலை ஆய்வு மையம்(CWA) தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கத்தின் மையமானது தரைமட்டத்தில் இருந்து 26.8 கி.மீ. ஆழத்தில் அமைந்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அண்மையில் கடந்த மாதம் 23-ந்தேதி தைவானில் ரிக்டர் 6.1 அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்