நேபாளத்தில் நிலநடுக்கம்; ரிக்டரில் 4.1 ஆக பதிவு
|நேபாளத்தில் சமீபத்தில் ஏற்பட்ட நிலநடுக்கங்களால், இதுபோன்ற பேரிடர்களை எதிர்கொள்ள கொள்கை முடிவுகளை எடுக்க வேண்டிய தேவை அரசுக்கு ஏற்பட்டு உள்ளது.
காத்மண்டு,
நேபாள நாட்டின் நாகர்கோட் பகுதியில் இருந்து வடக்கு வடகிழக்கே 21 கி.மீ. தொலைவில் இன்று அதிகாலை 5.52 மணியளவில் மித அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.
இந்நிலநிலநடுக்கம் ரிக்டரில் 4.1 ஆக பதிவாகி உள்ளது. நிலநடுக்கம் 10 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது என அமெரிக்க புவியியல் ஆய்வு அமைப்பு தெரிவித்து உள்ளது.
இதனால், ஏற்பட்ட பொருளிழப்புகள் உள்ளிட்ட பிற விவரங்கள் எதுவும் உடனடியாக வெளியிடப்படவில்லை. நேபாளத்தில் சமீபத்தில் ஏற்பட்ட நிலநடுக்கங்களால் முன்னெப்போதும் இல்லாத வகையில் உயிரிழப்புகளும் மற்றும் பொருளிழப்புகளும் ஏற்பட்டு உள்ளன.
இதனால், இதுபோன்ற பேரிடர்களை எதிர்கொள்ள கொள்கை முடிவுகளை எடுக்க வேண்டிய தேவை ஏற்பட்டு உள்ளது. கடந்த 2015ம் ஆண்டு ஏப்ரல் 25ந்தேதி ரிக்டரில் 7.8 அளவில் பதிவான நிலநடுக்கத்திற்கு 8,964 பேர் உயிரிழந்தனர். 22 ஆயிரம் பேர் வரை காயமடைந்தனர்.