< Back
உலக செய்திகள்
உலக செய்திகள்
மொராக்கோவில் பயங்கர நிலநடுக்கம் - 296 பேர் பலி
|9 Sept 2023 8:24 AM IST
மொராக்கோ நாட்டில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் 296 பேர் உயிரிழந்தனர்.
ரபட்,
வடக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு மொராக்கோ. இந்நாட்டில் நேற்று இரவு பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்நாட்டு நேரப்படி இரவு 11.11 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது.
ரிக்டர் அளவில் 7.0 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. இரவு நேரம் என்பதால் மக்கள் வீடுகளில் உறங்கிக்கொண்டிருந்த நிலையில் கட்டிட இடிபாடுகளுக்குள் பலர் சிக்கிக்கொண்டனர்.
இந்நிலையில், இந்த நிலநடுக்கத்தில் இதுவரை 296 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயமடைந்தனர். நிலநடுக்கத்தால் கட்டிட இடிபாடுகளுக்குள் பலர் சிக்கியுள்ள நிலையில் மீட்புப்பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளது.