< Back
உலக செய்திகள்
ஜப்பானில் நிலநடுக்கம்.. சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டதால் மக்கள் அச்சம்
உலக செய்திகள்

ஜப்பானில் நிலநடுக்கம்.. சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டதால் மக்கள் அச்சம்

தினத்தந்தி
|
24 Sept 2024 6:22 AM IST

ஜப்பானில் 5.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை வெளியிடப்பட்டது.

டோக்கியோ,

ஜப்பானின் தொலைதூர தீவான இசு தீவுகளுக்கு அருகே நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவில் 5.6 ரிக்டர் ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் மற்றும் உள்ளூர் வானிலை அதிகாரிகள் சுனாமி எச்சரிக்கையை வெளியிட்டுள்ளனர். இதனால் தீவில் வசிக்கும் மக்கள் அச்சத்துடன் காணப்படுகின்றனர்.

நான்கு பெரிய டெக்டோனிக் தட்டுகளின் மேல் ஜப்பான் நிலப்பரப்பு அமைந்துள்ளதால், ஒவ்வொரு ஆண்டும் சுமார் 1,500 நிலநடுக்கங்களை அந்நாடு எதிர்கொள்கிறது. அவற்றில் பெரும்பாலானவை சிறியவை. மேம்பட்ட கட்டிட நுட்பங்கள் மற்றும் நன்கு நடைமுறைப்படுத்தப்பட்ட அவசரகால நடைமுறைகள் காரணமாக பெரிய நடுக்கம் ஏற்பட்டாலும் பாதிப்பு பொதுவாகக் கட்டுப்படுத்தப்படுகிறது.

மேலும் செய்திகள்