ஜப்பானில் நிலநடுக்கம்: உதவி எண்களை அறிவித்தது இந்திய தூதரகம்
|இந்திய நேரப்படி மதியம் 12.40 மணியளவில் ஜப்பானில் 7.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
டோக்கியோ,
ஜப்பான் நாட்டின் மேற்கு பகுதியில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்திய நேரப்படி மதியம் 12.40 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.2 ஆக பதிவாகியுள்ளது. நிலநடுக்கம் ஏற்பட்டதையடுத்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் 5 மீட்டர் உயரத்திற்கு கடல் அலைகள் எழும் என்று அந்நாட்டு அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த நிலையில் ஜப்பானில் நிலநடுக்கம், சுனாமி பாதிப்பு தொடர்பாக உதவி எண்களை, இந்திய தூதரகம் அறிவித்துள்ளது. அதன்படி +81-80-3930-1715, +81-70-1492-0049, +81-80-3214-4734, +81-80-6229-5382, +81-80-3214-4722 என்ற உதவி எண்களிலும், sscons.tokyo@mea.gov.in, offfseco.tokyo@mea.gov.in ஆகிய மின்னஞ்சல் முகவரியிலும் தொடர்பு கொள்ளலாம் என்று இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.
மேலும், ஜப்பானில் உள்ள இந்தியர்கள் உள்ளூர் அரசின் வழிமுறைகளை பின்பற்றவும் இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.