< Back
உலக செய்திகள்
இந்தோனேசியாவில் 5.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்: 4 பேர் உயிரிழப்பு.!
உலக செய்திகள்

இந்தோனேசியாவில் 5.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்: 4 பேர் உயிரிழப்பு.!

தினத்தந்தி
|
10 Feb 2023 6:46 AM IST

நிலநடுக்கத்தால், கடற்கரையை ஒட்டி இருந்த ஒரு ஓட்டல் இடிந்து கடலில் விழுந்தது.

ஜகார்த்தா,

இந்தோனேசியாவின் கிழக்கு பிராந்தியமான பப்புவாவில் நேற்று நிலநடுக்கம் ஏற்பட்டது. ஜெயபுரா நகருக்கு தென்மேற்கே கடலுக்கடியில் 22 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்த இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.2 ஆக பதிவாகியிருந்தது.

இந்த நிலநடுக்கம் காரணமாக, கடற்கரையை ஒட்டி இருந்த ஒரு ஓட்டல் இடிந்து கடலில் விழுந்தது. இதில் இடிபாடுகளில் சிக்கி 4 பேர் உயிரிழந்தனர். சிலர் காயமடைந்தனர். மேலும் சில கட்டிடங்களும் சேதமடைந்துள்ளன. மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.

மேலும் செய்திகள்