< Back
உலக செய்திகள்
உலக செய்திகள்
இந்தோனேசியாவில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 5.0 ஆக பதிவு
|6 April 2024 4:31 PM IST
இந்தோனேசியாவின் அகாட்ஸிலிருந்து 251 கி.மீ. வடக்கே நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
ஜகார்த்தா,
இந்தோனேசியாவில் இன்று திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. காலை 8:24 மணியளவில் இந்தோனேசியாவின் அகாட்ஸிலிருந்து 251 கி.மீ. வடக்கே ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.0 ஆக பதிவானது என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
3.28 டிகிரி தெற்கு அட்சரேகையிலும், 138.28 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையிலும் , 64.9 கி.மீ. ஆழத்திலும் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது மேலும் இந்த நிலநடுக்கத்தால் உயிர்சேதம் எதுவும் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.