< Back
உலக செய்திகள்
இந்திய பெருங்கடலில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 6.2 ஆக பதிவு
உலக செய்திகள்

இந்திய பெருங்கடலில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 6.2 ஆக பதிவு

தினத்தந்தி
|
14 Nov 2023 1:44 PM IST

இலங்கையில் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.

கொழும்பு,

இந்திய பெருங்கடலில் இன்று நண்பகல் 12.31 மணியளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இலங்கை தலைநகர் கொழும்புவில் இருந்து 1,326 கிலோ மீட்டர் தொலைவில் இந்திய பெருங்கடலில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நிலநடுக்கம் இலங்கையிலும் உணரப்பட்டுள்ளது.

இந்திய பெருங்கடலில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை. அதேவேளை, இந்த நிலநடுக்கத்தால் இலங்கையில் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த விவரம் இதுவரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்