< Back
உலக செய்திகள்
உலக செய்திகள்
இலங்கை அதிபருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு
|12 Oct 2023 1:49 AM IST
இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்கை சந்தித்து பேசினார்.
கொழும்பு,
இந்திய பெருங்கடல் பிராந்தியத்தின் மிகப்பெரிய மற்றும் முதன்மையான அமைப்பான இந்திய பெருங்கடல் ரிம் சங்கத்தின் 23-வது கூட்டம், இலங்கையின் கொழும்பு நகரில் நேற்று நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் வங்காள தேசம், ஈரான், மொரிசியஸ், மலேசியா மற்றும் தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளின் வெளியுறவுத்துறை மந்திரிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக இலங்கை சென்று உள்ள இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்கை சந்தித்து பேசினார்.
இவர்களது சந்திப்பின் போது, இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான உறவை மேம்படுத்தும் நோக்கில் விரிவான ஆலோசனைகள் நடைபெற்றன. இரு நாடுகளுக்கும் இடையே அதிக ஒத்துழைப்பை வளர்ப்பதற்காக மூன்று புதிய இருதரப்பு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளன என இலங்கை அதிபர் அலுவலகம் தெரிவித்து உள்ளது.