< Back
உலக செய்திகள்
பிரேசில் அதிபருடன் வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு
உலக செய்திகள்

பிரேசில் அதிபருடன் வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

தினத்தந்தி
|
24 Aug 2022 9:56 PM IST

வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனாரோவை சந்தித்து பேசினார்.

பிரேசிலியா,

மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர், பிரேசில் நாட்டிற்கு அரசுமுறை பயணமாக சென்றுள்ளார். பிரேசில் அதிபர் போல்சனாரோவை சந்தித்து இன்று பேசினார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், அதிபர் ஜெய்ர் போல்சனாரோவை அழைப்பதில் பெருமை அடைகிறேன். பிரேசிலின் 200-வது ஆண்டு சுதந்திர தினத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி அன்பான வாழ்த்துக்களை தெரிவித்தார். இந்தியா மற்றும் பிரேசில் நாடுகளுக்கு இடையேயான நட்புறவை மேலும் வலுப்படுத்தும் வழிகாட்டுதல்களுக்கு மதிப்பளித்தார். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

முன்னதாக, பிரேசில் தலைநகர் சிட்டி பார்க்கில் உள்ள காந்தி சிலைக்கு மரியாதை செலுத்தினார். பிரேசிலில் வாழும் இந்திய வம்சாவளியினரை சந்தித்து உரையாடினார்.

மேலும் செய்திகள்