< Back
உலக செய்திகள்
துபாய் : ரோபோக்கள் மூலம் உணவகங்களில் உணவை தயாரித்து வழங்க சோதனை முயற்சி..!!

Image Courtesy : Screengrab Instagram miso.robotics

உலக செய்திகள்

துபாய் : ரோபோக்கள் மூலம் உணவகங்களில் உணவை தயாரித்து வழங்க சோதனை முயற்சி..!!

தினத்தந்தி
|
22 Jun 2022 3:18 PM IST

மிசோ ரோபோடிக்ஸ் உடன் இணைந்து இந்த திட்டத்தை அமெரிக்கானா உணவகங்கள் அறிமுகப்படுத்துகிறது.

துபாய்,

உணவகங்களில் வாடிக்கையாளர்களுக்கு புதிய 'ரோபோடிக்' அனுபவத்தை வழங்க துபாய் முடிவு செய்து உள்ளது. மத்திய கிழக்கு மற்றும் வட ஆப்பிரிக்காவில் மிகவும் பிரபலமானது அமெரிக்கானா உணவகங்கள். துபாயில் உள்ள இந்த உணவகங்களில் ரோபோக்கள் மூலம் வாடிக்கையாளர்களுக்கு உணவை தயாரிப்பதோடு மட்டுமின்றி ரோபோக்களே வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.



மிசோ ரோபோடிக்ஸ் உடன் இணைந்து இந்த திட்டத்தை அமெரிக்கானா உணவகங்கள் விரைவில் அறிமுகப்படுத்துகிறது. துபாயில் உள்ள விம்பி உணவகத்தில் 'பிலிப்பி 2' என்ற ரோபோ மூலம் விரைவில் இந்த சோதனை நடைபெறுகிறது.

மேலும் செய்திகள்