< Back
உலக செய்திகள்
துபாயில் பணிபுரியும் இந்திய ஓட்டுநருக்கு அடித்த ஜாக்பாட்: லாட்டரியில் ரூ.33 கோடியை  வென்றார்

கோப்புப்படம் 

உலக செய்திகள்

துபாயில் பணிபுரியும் இந்திய ஓட்டுநருக்கு அடித்த ஜாக்பாட்: லாட்டரியில் ரூ.33 கோடியை வென்றார்

தினத்தந்தி
|
24 Dec 2022 4:03 AM IST

லாட்டரியின் மூலம் 15 மில்லியன் திர்ஹம், இந்திய மதிப்பில் சுமார் ரூ33 கோடி மதிப்பிலான பரிசை வென்றார்.

துபாய்,

தென்னிந்தியாவில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர் அஜய் ஓகுலா. இவர் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு ஐக்கிய அரபு எமிரேட்ஸில் வேலைக்காக சென்றார். . தற்போது ஒரு நகைக்கடை நிறுவனத்தில் டிரைவராக பணிபுரியும் அவர், ஒவ்வொரு மாதமும் 3,200 திர்ஹம் சம்பாதித்து வந்துள்ளார்.

இந்த நிலையில், அஜய் ஓகுலாவுக்கு லாட்டரியின் மூலம் அதிர்ஷ்டம் அடித்துள்ளது. அதாவது 15 மில்லியன் திர்ஹம், இந்திய மதிப்பில் சுமார் ரூ33 கோடி மதிப்பிலான பரிசை வென்றார்.

லாட்டரி பரிசை வென்றது குறித்து ஓகுலா கூறும்போது, எனக்கு லாட்டரியில் ஜாக்பாட் அடித்ததை என்னால் இன்னும் நம்ப முடியவில்லை. லாட்டரியின் மூலம் நான் கோடீஸ்வரனான செய்தியை இந்தியாவில் உள்ள எனது உறவினர்களிடம் தெரிவித்தேன். அவர்களும் இதனை நம்பவில்லை.

தனக்கு கிடைத்த இந்தத் தொகையில் ஒரு தொண்டு அறக்கட்டளையை உருவாக்குவேன். மேலும் இந்த பணம் எனது சொந்த ஊர் மற்றும் அண்டை கிராமங்களில் உள்ள அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய பலருக்கும் உதவும். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்