< Back
உலக செய்திகள்
உலக செய்திகள்
துனிசியாவில் ரூ.15 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல்
|1 Aug 2023 10:48 PM IST
துனிசியாவில் ரூ.15 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.
துனிசியாவின் தலைநகர் துனிசில் போதைப்பொருள் நடமாட்டம் அதிகம் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் அங்கு தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்குள்ள கார்தேஜ் பகுதியில் சந்தேகப்படும்படியாக வந்த வாகனங்களை மறித்து சோதனை செய்தனர். இதில் 226 கிலோ எடையுள்ள கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது.
இதனையடுத்து கஞ்சா கடத்தியதாக 9 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த கஞ்சாவின் மதிப்பு சுமார் ரூ.15 கோடி என துனிசிய உள்துறை அமைச்சகம் கூறியது.