< Back
உலக செய்திகள்
உலக செய்திகள்
ஆஸ்திரேலியாவில் ஆய்வகத்தில் ரூ.66 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பதுக்கல் - 2 பேர் கைது
|9 Jun 2023 12:32 AM IST
போதைப்பொருட்களை பதுக்கி வைத்திருந்ததாக ஆய்வகத்தின் உரிமையாளர்கள் 2 பேரை போலீசா கைது செய்தனர்.
கான்பெரா,
ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாகாணம் கிர்ராவியில் உள்ள ஒரு ஆய்வகத்தில் போதைப்பொருள் பதுக்கி வைக்கப்பட்டு உள்ளதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் அங்கு சென்று தேடுதல் வேட்டையில் போலீசார் ஈடுபட்டனர். அப்போது அங்கு 30 கிலோ மெத்தில் ஆம்பெடமைன், 1½ லிட்டர் திரவ மெத்தில் ஆம்பெடமைன் போன்ற உயர் ரக போதைப்பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது தெரிய வந்தது.
இதன் மதிப்பு இந்திய மதிப்பில் சுமார் ரூ.66 கோடி என்று கூறப்படுகிறது. இந்த போதைப்பொருட்களை பறிமுதல் செய்த போலீசார், தடை செய்யப்பட்ட போதைப்பொருட்களை பதுக்கி வைத்திருந்ததாக அந்த ஆய்வகத்தின் உரிமையாளர்கள் 2 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.