< Back
உலக செய்திகள்
காதலரின் விருப்பத்திற்கு எதிராக 800 மைல் சென்று கருக்கலைப்பு; காதலிக்கு நேர்ந்த கதி
உலக செய்திகள்

காதலரின் விருப்பத்திற்கு எதிராக 800 மைல் சென்று கருக்கலைப்பு; காதலிக்கு நேர்ந்த கதி

தினத்தந்தி
|
13 May 2023 5:18 PM IST

அமெரிக்காவில் 800 மைல் சென்று கருக்கலைப்பு செய்து விட்டு திரும்பிய 26 வயது காதலியை, 22 வயது காதலர் சுட்டு கொன்றுள்ளார்.

டெக்சாஸ்,

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் வசித்து வருபவர் ஹரால்டு தாம்சன் (வயது 22). இவரது காதலி கேப்ரியல்லா கொன்சாலஸ் (வயது 26). இவர்களது காதல் முற்றியதில் கேப்ரியல்லா கர்ப்பமடைந்து உள்ளார்.

எனினும், அதில் கேப்ரியல்லாவுக்கு விருப்பமில்லை என கூறப்படுகிறது. ஆனால், தனது குழந்தை தனக்கு வேண்டும் என ஹரால்டு விரும்பி உள்ளார்.

டெக்சாஸில் 6 வார காலத்திற்கு பின்னான கருவை கலைக்க சட்ட அனுமதி இல்லை. இந்த நிலையில், 800 மைல் தொலைவில் உள்ள கொலராடோவுக்கு சென்று கேப்ரியல்லா கருக்கலைப்பு செய்து விட்டு திரும்பியுள்ளார்.

இதன்பின் காதலர் ஹரால்டுடன் ஷாப்பிங் சென்று உள்ளார். இந்த விவராம் தெரியாமல் காதலியுடன் அவர் பேசி கொண்டே சென்று உள்ளார். இந்நிலையில், கேப்ரியல்லா கருக்கலைப்பு செய்த விவரம் பற்றி அறிந்ததும் ஹரால்டு அதிர்ச்சியும், ஆத்திரமும் அடைந்து உள்ளார்.

இதனால், அவர்கள் இடையே சண்டை ஏற்பட்டு உள்ளது. அவர், தனது விருப்பத்திற்கு எதிராக நடந்து கொண்டதற்காக கேப்ரியல்லா மீது ஆத்திரத்தில் இருந்து உள்ளார். இதனால், ஷாப்பிங் வளாகத்தின் வாகன நிறுத்தும் இடத்திற்கு அவரை அழைத்து சென்றுள்ளார்.

அதன்பின் கேப்ரியல்லாவின் கழுத்து பகுதியை, மூச்சு விட முடியாத அளவுக்கு இறுக்கி பிடித்து உள்ளார். எனினும், அவரை கேப்ரியல்லா தள்ளி விட்டு உள்ளார்.

இந்த முறை, துப்பாக்கியை எடுத்து காதலியின் தலையில் ஹரால்டு சுட்டு உள்ளார். இதில், கேப்ரியல்லா சரிந்து கீழே விழுந்த பின்பும், ஆத்திரம் தணியாமல் தொடர்ந்து அவரை சுட்டு விட்டு தப்பியோடி விட்டார். சம்பவ இடத்திலேயே கேப்ரியல்லா உயிரிழந்து விட்டார்.

இவர்கள் இருவருக்கும் இடையேயான காதல் உறவில் அடிக்கடி, சண்டை வந்து உள்ளது. காதலியை ஹரால்டு பல முறை அடித்து, துன்புறுத்தி உள்ளார் என கூறப்படுகிறது. இதுபற்றி போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்