< Back
உலக செய்திகள்
நைஜீரியா: ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்து - 26 பேர் பலி
உலக செய்திகள்

நைஜீரியா: ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்து - 26 பேர் பலி

தினத்தந்தி
|
11 Sept 2023 7:07 AM IST

நைஜீரியாவில் ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் 26 பேர் உயிரிழந்தனர்.

அபுஜா,

நைஜீரியா நாட்டின் நைஜர் மாகாணம் மொக்வா நகரில் உள்ள ஆற்றில் நேற்று 100 பேர் படகில் பயணம் மேற்கொண்டனர். அண்டை நகரில் விவசாய பணிக்காக இவர்கள் படகில் பயணம் செய்தனர்.

நைஜர் ஆற்றில் பயணம் மேற்கொண்டபோது இவர்கள் சென்ற படகு திடீரென கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் படகில் பயணம் செய்த அனைவரும் ஆற்றுக்குள் விழுந்தனர். இந்த விபத்து குறித்து தகவலறிந்த மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆற்றில் சிக்கித்தவித்த 30 பேரை உயிருடன் மீட்டனர்.

ஆனால், இந்த படகு விபத்தில் 24 பேர் உயிரிழந்தனர். அதேவேளை, படகு விபத்தில் பலர் மாயமான நிலையில் அவர்களை தேடும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன.

மேலும் செய்திகள்