< Back
உலக செய்திகள்
எந்த நிறுவனத்திற்கும் தலைமை நிர்வாக அதிகாரியாக இருக்க விரும்பவில்லை: வெளிப்படையாக பேசிய எலான் மஸ்க்!
உலக செய்திகள்

எந்த நிறுவனத்திற்கும் தலைமை நிர்வாக அதிகாரியாக இருக்க விரும்பவில்லை: வெளிப்படையாக பேசிய எலான் மஸ்க்!

தினத்தந்தி
|
17 Nov 2022 9:52 AM IST

இந்த வாரம் டுவிட்டர் நிறுவனத்தில் மறுசீரமைப்பை முடிக்க முடியும் என்று அவர் தெரிவித்தார்.

நியூயார்க்,

உலகின் மிக மதிப்புமிக்க வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவில் தலைமை செயல் அதிகாரியாக பணியாற்றி வருபவர் எலான் மஸ்க். அவர் சமீபத்தில் சமூக வலைதளமான டுவிட்டர் நிறுவனத்தை கையகப்படுத்தினார்.

டெஸ்லா பங்குதாரர் ரிச்சர்ட் ஜே. டோர்னெட்டா என்பவர் எலான் மஸ்க் மீது வழக்கு தொடர்ந்தார். 2018இல், டெஸ்லா தலைமை நிர்வாக அதிகாரி(எலான் மஸ்க்) வழங்கிய இழப்பீடு தொகை அளவுக்கு அதிகமாக இருப்பதாக குற்றம் சாட்டியுள்ளார். இந்த வழக்கில் எலான் மஸ்க் நேற்று கோர்ட்டில் ஆஜராகி சாட்சியம் அளித்தார்.

அப்போது எலான் மஸ்க் கூறுகையில், "நான் எந்த நிறுவனத்திற்கும் தலைமை நிர்வாக அதிகாரியாக இருக்க விரும்பவில்லை" என்று வெளிப்படையாக கோர்ட்டில் தெரிவித்தார்.

இதன்மூலம், எலான் மஸ்க், டுவிட்டரின் தலைமை நிர்வாக அதிகாரியாக எப்போதும் இருக்க விரும்பவில்லை என்று மீண்டும் வலியுறுத்தி உள்ளார். இந்த வாரம் டுவிட்டரில் மறுசீரமைப்பை முடிக்க முடியும் என்றும் டுவிட்டருக்கான புதிய தலைமை அதிகாரியை நியமிக்கப்போவதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்