< Back
உலக செய்திகள்
அவர்களுக்கும் பாதுகாப்பு வேண்டுமல்லவா...? 25 வயதுக்கு கீழ் இலவச காண்டம்...!! இந்த நாட்டில் அறிவிப்பு
உலக செய்திகள்

அவர்களுக்கும் பாதுகாப்பு வேண்டுமல்லவா...? 25 வயதுக்கு கீழ் இலவச காண்டம்...!! இந்த நாட்டில் அறிவிப்பு

தினத்தந்தி
|
10 Dec 2022 10:17 AM IST

25 வயதுக்கு கீழ் உள்ள அனைத்து நபர்களுக்கும் இலவச காண்டம் வழங்கப்படும் என இந்த நாட்டில் அறிவிக்கப்பட்டு உள்ளது.

பாரீஸ்,


பொதுமக்களுக்கு இலவச கல்வி, மருத்துவம் போன்ற அத்தியாவசிய மற்றும் அடிப்படையான விசயங்களுக்கு, முன்னுரிமை கொடுத்து செயல்படும் நாடுகளின் மத்தியில் பிரான்ஸ் அரசு வித்தியாசம் வாய்ந்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு உள்ளது.

இதன்படி, பிரான்சில் வசிக்கும் மக்களில் 25 வயது வரையிலான அனைவருக்கும் இலவச காண்டம் வழங்கப்படும் என்பதே அரசின் அந்த அறிவிப்பு.

இதுபற்றி அதிபர் இமானுவேல் மேக்ரான் கூறும்போது, 18 முதல் 25 வயதுக்கு உட்பட்டவர்கள் மருந்தகங்களில் இருந்து இலவச காண்டங்களை பெற்று கொள்ளலாம். இந்த நடைமுறை வருகிற புது வருடத்தில் இருந்து நடைமுறைக்கு வரும். ஜனவரி 1-ந்தேதியில் இருந்து நாடு முழுவதும் அமல்படுத்தப்படும் என கூறினார்.

ஆனால், அவரது இந்த அறிவிப்புக்கு சிலர் எதிர்ப்பு குரல் கொடுத்தனர். அது என்ன 18 வயது என்ற அளவீடு? அதற்கு கீழுள்ள வயதினருக்கு இந்த அறிவிப்பு என்னவானது? என்பன போன்று சமூக ஊடகங்களிலும் விமர்சனங்கள் எழுந்தன.

இதனால், மக்கள் எதிர்ப்பை புரிந்து கொண்டு, இந்த திட்டம் விரிவுப்படுத்தப்படுகிறது என அதிபர் கூறியுள்ளார். இதனால், 25 வயதுக்கு கீழ் உள்ள அனைத்து நபர்களுக்கும் இனி இலவச காண்டம் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதுபற்றி அதிபர் மேக்ரான் கூறும்போது, பாலியல் உறவில் மைனர் வயதில் உள்ளவர்களும் நிறைய பேர் ஈடுபடுகின்றனர். அவர்களுக்கும் பாதுகாப்பு வேண்டும் அல்லவா? அதனாலேயே இந்த முடிவு என கூறியுள்ளார். இதனால் பிரான்சில் உள்ள மருந்து கடைகளில் கூட்டம் அலைமோதுகிறது என கூறப்படுகிறது.

மேலும் செய்திகள்